9/11: கனடா-அமெரிக்க பந்தம்: வர்த்தகப் போரை விட எங்கள் உறவு வலிமையானது!

அமெரிக்காவையே உலுக்கிய செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி, Al-Qaeda பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட விமானங்கள் New York World Trade Center கோபுரங்கள் மற்றும் Pentagon மீது மோதச் செய்யப்பட்டன. மற்றொரு விமானம் Pennsylvaniaவில் விழுந்தது.

இந்தத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 3,000 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 24 கனடியர்களும் அடங்குகின்றனர்.

இந்த 25ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, Ontarioவின் St. Catharines நகரில் உள்ள 9/11 Memorial Trail விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள், தாக்குதலில் உயிர்தப்பியவர்கள், மீட்புப் பணியாளர்களை நினைவுகூரும் வகையில் ஒன்பது புதிய மரங்கள் நடப்பட்டுள்ளன.

St. Catharines மேயர் Mat Siscoe, தற்போது கனடா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக மற்றும் அரசியல் பதற்றங்கள் இருந்தாலும், இரு நாடுகளின் மக்களுக்கிடையேயான உறவு அதைவிட வலிமையானது என தெரிவித்துள்ளார்.

“கனடியர்கள் அமெரிக்க மக்களை சகோதர, சகோதரிகள், உறவினர்கள் போலவே பார்க்கிறார்கள்” என்றும் அவர் கூறினார்.

9/11 தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்க வான்வெளி மூடப்பட்டபோது, 200-க்கும் அதிகமான விமானங்கள் கனடாவிற்கு திருப்பிவிடப்பட்டன.

குறிப்பாக Newfoundland-இன் Gander நகரம் மட்டும் 38 விமானங்களில் வந்த 6,500-க்கும் மேற்பட்ட பயணிகளை வரவேற்று உதவியது.

Canadian Red Cross தொண்டர்கள் New York சென்று உதவியதுடன், நூற்றுக்கணக்கான கனடிய தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் மீட்பு நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

அமெரிக்க அதிகாரிகள், அந்த இருண்ட காலத்தில் கனடா காட்டிய ஆதரவை ஒருபோதும் மறக்கமாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

25 ஆண்டுகள் கடந்தாலும், 9/11 நினைவு என்பது ஒரு துயரத்தின் நினைவாக மட்டுமல்ல.

அது கனடா மற்றும் அமெரிக்க மக்களுக்கிடையே நிலவும் ஆழமான நட்பு, ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தின் நினைவாகவும் தொடர்ந்து நிற்கிறது.

Related Articles

Latest Articles