ரிச்மண்ட் ஹில் (RichmondHill) பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயது மருத்துவர் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டில் இந்தக் குற்றச் செயலில் குறித்த மருத்துவர் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு ஜூலை 4 அன்று மருத்துவ பரிசோதனைக்காக வந்த ஒரு நோயாளியை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் இது பற்றி 2024 ஏப்ரலில் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.
மருத்துவ பரிசோதனை செய்யும்போது, குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் நோயாளியை பாலியல் நோக்கத்திற்கு பயன்படுத்த முயற்சித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த மருத்துவரினால் வேறு எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் தகவல் வழங்குமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.