7 Career Colleges… $385 மில்லியன் OSAP Grants! என்ன நடந்தது?

Ontarioவில் மாணவர்களுக்கு வழங்கப்படும் OSAP நிதி தொடர்பாக புதிய தரவுகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

2024–25 கல்வியாண்டில், Ontarioவில் உள்ள வெறும் ஏழு Private Career Colleges-ல் படித்த மாணவர்களுக்கு மட்டும் சுமார் 385 மில்லியன் டொலர் provincial OSAP grants வழங்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ontarioவில் சுமார் 170 Career Colleges உள்ள நிலையில், குறிப்பிட்ட சில கல்லூரிகளில் OSAP பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளதாக Freedom of Information மூலம் பெறப்பட்ட தரவுகள் காட்டுகின்றன.

சில கல்வி நிறுவனங்களில், சில ஆண்டுகளுக்கு முன்பு 100-க்கும் குறைவான மாணவர்கள் OSAP பெற்ற நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை பல ஆயிரங்களாக உயர்ந்துள்ளது.

இன்னும் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், இந்த ஏழு Career Colleges மாணவர்களுக்கு வழங்கப்பட்ட $385 மில்லியன், அதே ஆண்டில் Ontarioவின் அனைத்து publicly funded colleges மாணவர்களுக்கும் வழங்கப்பட்ட provincial grants தொகைக்கு நிகரானதாகும். Ontario பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த provincial grants-ஐ விடவும் இது அதிகம்.

இதையடுத்து OSAP செலவுகள் நிலைத்திருக்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக கூறிய Doug Ford தலைமையிலான Ontario அரசு, Private Career College மாணவர்கள் இனிமேல் OSAP grants பெறுவதை தடை செய்துள்ளது.

மேலும், வரும் கல்வியாண்டில் ஐந்து Career Colleges-ல் படிக்கும் மாணவர்களுக்கு OSAP வழங்குவதற்கான தகுதியையும் Ontario அரசு நிறுத்தியுள்ளது.

OSAP முறையில் பொறுப்புணர்வை அதிகரிக்கவும், அரசுப் பணம் முறையாக பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் இந்த Fall-ல் மேலும் புதிய சட்ட நடவடிக்கைகளை கொண்டுவரவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles