60வது பிறந்தநாளை 100 இரத்தக் கொடைகளுக்கான இலக்காக மாற்றிய பெண்!

ctvnews

பிரின்ஸ் எட்வர்ட் தீவின் (Prince Edward Island) சார்லட்டவுன் (Charlottetown) பகுதியைச் சேர்ந்த கேரல் ஓ‘ஹான்லி (Carol O’Hanley) தனது 60வது பிறந்தநாளை முன்னிட்டு, 100 இரத்தக் கொடைகளைச் சேகரிக்கும் நோக்குடன் ஒரு விசேட பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.

நவம்பர் 3 அன்று காலை, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் கனடிய இரத்த சேவைகள் (Canadian Blood Services) மையத்தில் ஒன்றுகூடி இரத்த தானம் செய்தனர்.

“Bloody Brilliant at 60” என்ற பெயரிலான இக்குழு, ஏற்கனவே இந்த ஆண்டில் 50க்கும் மேற்பட்ட இரத்த தானங்களைச் செய்துள்ளது.

ஊசி பயம் காரணமாக இதுவரை இரத்த தானம் செய்யத் தயங்கிய முதல் முறை கொடையாளர்களும், மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்து நன்றிக்கடனாக இரத்த தானம் செய்வோரும் இதில் இணைந்துள்ளனர்.

O-negative இரத்த வகையைக் கொண்ட கேரல் ஓ‘ஹான்லி (Carol O’Hanley), ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் இரத்த தானம் செய்து ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும் எனக் கூறி, ஆண்டின் இறுதிக்குள் 100 கொடைகளை எட்டும் இலக்குடன் செயற்பட்டு வருகிறார்.

Previous articleமக்களின் வாழ்க்கைக் செலவைக் குறைக்க அரசு அறிவித்துள்ள சலுகைகள்!
Next articleகியூபா-அமெரிக்க பதற்றத்தால் அதிக செலவுடைய சுற்றுலாத் தலங்களை நாடும் கனடியர்கள்!