$5,000 இழப்பு – முடிக்கப்படாத டிரைவ்வே வேலை குறித்து Toronto முதிய தம்பதியரின் வேதனை!

மற்றும் அவரது மனைவி Ethel Barran, வீட்டு டிரைவ்வே அமைக்கும் பணிக்காக $5,000 பணத்தை வழங்கிய பின்னர் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த மே மாதத்தில், Maple Stone Paving and Masonry என்ற நிறுவனம் தங்களது வீட்டுக்கு நேரடியாக வந்து, அப்பகுதியில் வேலை செய்து வருவதால் குறைந்த கட்டணத்தில் டிரைவ்வே அமைத்து தருவதாக கூறியுள்ளது.

பணம் காசாகவே வழங்க வேண்டும் எனவும் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பணிகள் முடிந்த பின்னர் டிரைவ்வேயில் விரிசல்கள், பள்ளங்கள் மற்றும் கற்கள் உதிரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், வேலை முழுமையாக முடிக்கப்படாமல் பாதி பகுதி மட்டும் புதுப்பிக்கப்பட்டதாகவும், அகற்றப்பட்ட கதவும் மீண்டும் பொருத்தப்படவில்லை என்றும் தம்பதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

பிரச்சினைகளை சரிசெய்ய மீண்டும் வருவதாக நிறுவனம் உறுதியளித்திருந்தாலும், பின்னர் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், Ontario Provincial Police (OPP) கோடை காலங்களில் வீடு வீடாகச் சென்று டிரைவ்வே, கூரை உள்ளிட்ட வீட்டு பழுதுபார்ப்பு சேவைகள் வழங்குவதாக கூறி நடைபெறும் மோசடிகள் குறித்து மக்களை எச்சரித்துள்ளது.

முன்பணம் காசாக வழங்குவதை தவிர்க்கவும், நிறுவனங்களை முன்கூட்டியே ஆய்வு செய்யவும், அவசர முடிவுகள் எடுக்க வேண்டாமெனவும் OPP அறிவுறுத்தியுள்ளது.

 

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles