“50% அமெரிக்க வரி நெருங்குகிறது” — ‘பேச்சுவார்த்தை நுணுக்கமான கட்டத்தில்’ என்கிறார் Carney

கனடா மீது புதிய 50 சதவீத அமெரிக்க வரிகள் அமலுக்கு வர இன்னும் மிகக் குறுகிய நேரமே உள்ளது.

இந்த நிலையில் கனடா அமெரிக்கா இடையிலான கடைசி நேர வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் “மிகவும் தீவிரமானதும் நுணுக்கமானதுமான கட்டத்தில்” என பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் Donald Trump அறிவித்துள்ள புதிய வரிகள், ஆகஸ்ட் 19 புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.

Wine, furniture, dairy products, cement, clothing, fishing rods, hockey equipment உள்ளிட்ட பல கனடிய பொருட்களுக்கு 50 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம்.

இதனால் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கனேடிய ஏற்றுமதி பாதிக்கப்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவின் வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc உள்ளிட்டோர் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இரு நாடுகளுக்கும் இடையில் இன்னும் முக்கியமான வேறுபாடுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக கனேடிய வாகனங்கள் மீதான வரிகள், பால்பொருட்கள் மீதான வரிகள், மற்றும் பல மாகாணங்களில் அமெரிக்க மதுபானங்கள் விற்பனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை ஆகியவை முக்கிய பேச்சுப் பொருட்களாக உள்ளன.

பேச்சுவார்த்தையின் விவரங்களை பொதுவெளியில் வெளியிட மறுத்த Carney, வரிக்கான காலக்கெடுவுக்கு முன்னதாக Donald Trump-உடன் நேரடியாகப் பேச வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் எல்லா சாத்தியமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள கனடாவிடம் திட்டம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்த புதிய வரிகள் நடைமுறைக்கு வந்தால், அமெரிக்க சந்தையை பெரிதும் நம்பியுள்ள கனடிய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Carney–Trump நேரடி பேச்சு கடைசி நேர ஒப்பந்தத்தை உருவாக்குமா? அல்லது புதன்கிழமை முதல் கனடா மீது புதிய 50% tariffs அமலுக்கு வருமா?

Video thumbnail
Toronto-வில் புதிய சுகாதார எச்சரிக்கை!
01:38
Video thumbnail
விமானம் கண்டுபிடிக்கப்பட்டது... ஆனால் விமானி எங்கே?
01:19
Video thumbnail
CA-US 50% Trump Tariff-க்கு Countdown ஆரம்பம்!
01:47
Video thumbnail
🌧️🏠 வெள்ளம் வந்தால் வீட்டுக்கு மட்டும் பாதிப்பில்லை... உங்கள் Insurance bill-க்கும் பாதிப்பு!
01:23
Video thumbnail
🚲❌ Toronto Bike Lanes அகற்றப்படுகிறதா? Ford அரசுக்கு முக்கிய நீதிமன்ற வெற்றி!
01:29
Video thumbnail
💻❌ Laptop வேண்டாம்... ✍️ கையால் எழுதுங்கள்!AI காலத்தில் மீண்டும் பேனை, பேப்பரா? 🤔
01:49
Video thumbnail
Scarborough-வில் பரபரப்பு! 🔍 கண்டெடுக்கப்பட்டது உண்மையில் மனித உடல் எச்சங்களா?
00:44
Video thumbnail
⚠️ Burlington-ல் வௌவாலுக்கு Rabies உறுதி!
01:13
Video thumbnail
கனடாவில் இருந்து தாயகம் சென்ற தமிழருக்கு நேர்ந்த சோகம்...
01:14
Video thumbnail
தமிழர் தெருவிழா சொல்லும் கதை என்ன? அதன் பின்னணி என்ன?
33:43

Related Articles

Latest Articles