சுமார் 5 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களைத் திருடிய வழக்கில் இருவரை பீல் பிராந்திய பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் முதல் ஜனவரி வரை இரண்டு மாதங்கள் இவ்வாறு பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்தத் திருட்டு சம்பவங்களில் போக்குவரத்து நிறுவனம் ஒன்று தொடர்புபட்டிருப்பதாக தெரியவருகிறது.
இந்த நிறுவனம் ஒன்லைன் ஊடாக பொருட்கள் விநியோகிக்கும் தரப்பினரைத் தொடர்புகொண்டு குறைந்த விலையில் சேவைகளை வழங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
குறித்த போக்குவரத்து ஒப்பந்தம் பெற்ற பின்னர் வேறு போக்குவரத்து நிறுவனங்களின் உதவியுடன் பொருட்களை எடுத்துச் சென்று பொருட்களைத் திருடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் இந்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் பலர் கைதுசெய்யப்படலாம் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.