38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!

கனடாவின் பிளாஸ்டிக் கழிவுகளில் சுமார் 30 சதவீதம் கட்டுமான மற்றும் இடிப்புப் பணிகளிலிருந்து வெளியாகிறது.

இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், லாட் ஹவுஸ் (Light House) என்ற இலாப நோக்கற்ற நிறுவனம் 14 மாத முன்னோடித் திட்டத்தினை மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம், மெட்ரோ வான்கூவர் பகுதியில் 38,000 கிலோகிராம் கட்டுமான பிளாஸ்டிக் கழிவுகள் குப்பை மேடுகளுக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது.

பி.என்.இ ஆம்பிதியேட்டர் (PNE Amphitheatre), ஹோல்டம் ஓவர் பாஸ் (Holdom Overpass) மற்றும் ஸ்டீவஸ்டன் சமூக மையம் (Steveston Community Centre) போன்ற எட்டு கட்டுமானத் தளங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

கட்டுமானத் தளங்களில் பிளாஸ்டிக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து, அவற்றைச் சிறு துண்டுகளாக அரைத்து, சிறுமணிகளாக (Pellets) மாற்றினர்.

பின்னர், டெல்டா-வை (Delta) தளமாகக் கொண்ட பிளாஸ்கான் பிளாஸ்டிக்ஸ் (Plascon Plastics) நிறுவனம், இதைக் கொண்டு கொ​ன்கிரீட் பயன்பாட்டைக் குறைக்கும் ‘இன்பினானெட்’ (InfinaNet) என்ற தயாரிப்பை உருவாக்கியது.

கழிவுகளைச் சரியாகப் பிரித்தெடுப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குத் தாங்கள் பங்களிப்பதை எண்ணித் தொழிலாளர்கள் பெருமை அடைந்ததாக இந்தத் திட்டத்தின் பணிப்பாளர் கில் யாரோன் (Gil Yaron) தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் செலவு குறைந்த அல்லது இலாபகரமானதாக அமைந்ததால், பல ஒப்பந்ததாரர்கள் இதில் ஆர்வத்துடன் இணைந்துள்ளனர்.

எதிர்காலத்தில் பல நகரங்களில் இத்திட்டத்தை விரிவுபடுத்த லாட் ஹவுஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Video thumbnail
கனடாவில் சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஏ.ஐ (AI) தடை? லிபரல் கட்சி விவாதம்!
01:21
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் கனமழை - வீதிகளில் நீர் தேக்கம், சாரதிகளுக்கு எச்சரிக்கை!
01:12
Video thumbnail
ரெஜினாவில் (Regina) நள்ளிரவில் தீ வைப்பு - பாதுகாப்பு கெமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி!
01:05
Video thumbnail
பிராம்ப்டனில் கோர விபத்து - எஸ்.யு.வி கார் லொரியின் அடியில் சிக்கி நபர் பலி!
01:02
Video thumbnail
ஒன்ராறியோவில் பல பில்லியன் டொலர் செலவில் சிறை கொள்ளளவை அதிகரிக்க திட்டம்!
01:25

Related Articles

Latest Articles