Toronto-வின் மிகப்பெரிய தெருவிழாக்களில் ஒன்றான Taste of the Danforth, இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்துள்ளது.
ஆகஸ்ட் 7 முதல் 9 வரை நடைபெற்ற மூன்று நாள் விழாவில், சுமார் 2 மில்லியன் பேர் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இது கடந்த காலங்களில் பதிவான அதிகபட்ச வருகையான சுமார் 1.6 மில்லியனையும் தாண்டியதாகும்.
Greek உணவு மற்றும் கலாசாரத்தை மையமாகக் கொண்ட இந்த விழாவில் இசை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான activities மற்றும் Toronto-வின் multicultural community-ஐ பிரதிபலிக்கும் பல அம்சங்கள் இடம்பெற்றன.
2024-25ஆம் ஆண்டுகளில் நிதிச் சிக்கல்கள் காரணமாக விழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு மீண்டும் நடத்துவதற்காக Ontario மற்றும் City of Toronto தலா $200,000 உதவி வழங்கின. மத்திய அரசாங்கமும் $100,000 நிதி உதவியை அறிவித்தது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த கலாசார தெருவிழாவுக்கு 2 மில்லியன் மக்கள் ஒன்றுகூடி Toronto-வில் multicultural festivals-க்கு இருக்கும் வரவேற்பை எடுத்துக்காட்டியுள்ளனர்.
