“இதனால் அமெரிக்கர்களுக்கே பாதிப்பு!” — Canada மீதான வரிகளுக்கு அமெரிக்கர்களிடமிருந்தே எதிர்ப்புக் குரல்

Canada–U.S. வர்த்தகப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், Canada மீது விதிக்கப்படும் வரிகள் குறித்து சில அமெரிக்கர்களே அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Washington, D.C.-யில் ஊடகங்களிடம் பேசிய அமெரிக்கர்கள், நீண்டகால நட்பு மற்றும் வர்த்தக உறவு கொண்ட Canada மீது புதிய வரிகளை விதிப்பது இரு நாடுகளுக்கும் பயனளிக்காது என தெரிவித்துள்ளனர்.

சுதந்திரமான வர்த்தகமே இரு நட்பு நாடுகளுக்கும் சிறந்தது என்றும், வரிகள் இறுதியில் அமெரிக்க மக்களையும் பாதிக்கும் என்றும் அமெரிக்க மக்கள் கருதுகின்றனர். 

இந்த வர்த்தக மோதல் கனேடியர்களோடு அமெரிக்கர்களையும் பாதிக்கும் என்றும் கருத்து கூறப்பட்டது. 

இதற்கிடையில், ஆகஸ்ட் 19 முதல் புதிய 50 சதவீத U.S. வரிகள் அமலுக்கு வரக்கூடும் என்பதால், Canada–U.S. பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.

அரசாங்கங்களுக்கு இடையிலான இந்த வர்த்தகப் போரின் உண்மையான விலையை இறுதியில் இரு நாடுகளின் சாதாரண மக்கள்தான் செலுத்த வேண்டியிருக்குமா? என்பதே இப்போது எழும் கேள்வி.

Related Articles

Latest Articles