18 வயதை கடந்தும் பெற்றோர் உதவி பெறும் பிள்ளைகள்! RBC ஆய்வு

கனடாவில் வளர்ந்த பிள்ளைகளின் வாழ்க்கைச் செலவுகளுக்கும் பெற்றோரே தொடர்ந்து நிதி உதவி செய்து வருவதாக RBC-யின் புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

18 முதல் 40 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் கொண்ட கனடிய பெற்றோரில் 51 வீதமானோர், கடந்த ஒரு ஆண்டில் தங்களது வளர்ந்த பிள்ளைகளுக்கு பண உதவி வழங்கியுள்ளதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு உதவி செய்தவர்களில் 56 சதவீதமானோர் அன்றாட உணவு மற்றும் மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக பணம் வழங்கியுள்ளனர்.

மேலும் 43 வீதமானோர், எதிர்பாராத அல்லது அவசர செலவுகளுக்கு உதவி செய்துள்ளனர்.

குறிப்பாக 24 சதவீத பெற்றோர், தங்களது பிள்ளைகளின் வீட்டு வாடகையைச் செலுத்துவதற்கும் நிதி உதவி செய்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

இந்த உதவித் தொகையும் சிறியதல்ல.

நிதி உதவி செய்த பெற்றோர் கடந்த ஒரு ஆண்டில் சராசரியாக 6,151 கனடிய டொலர்கள் வழங்கியுள்ளனர்.

அதேவேளை, உதவி செய்தவர்களில் 24 சதவீதம் பேர் 10,000 டொலர்களுக்கும் அதிகமாக தங்களது வளர்ந்த பிள்ளைகளுக்காக செலவிட்டுள்ளனர்.

கனடாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், வளர்ந்த பிள்ளைகளின் பொருளாதார சுமையை மட்டுமல்லாமல், பெற்றோரின் சேமிப்புகளையும் பாதிக்கிறதா என்ற கேள்வியை இந்த அறிக்கை எழுப்புகிறது.

Related Articles

Latest Articles