14 வயது சிறுமிக்கு வலைவீசிய 47 வயது நபர் கைது!

ஒன்லைன் மூலம் சிறுமிகளை தொடர்புகொண்டு, ஏமாற்றிவந்த 47 வயது நபர் ஒருவரை Durham பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

14 வயது சிறுமியொருவரை இலக்கு வைத்தபோது குறித்த நபரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் 14 வயது சிறுமியொருவர் இருப்பதாக நம்பி பல ஆபாச தகவல்களையும் படங்களையும் அனுப்பியுள்ளார்.

இதன்பின்னர் Pickering பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் சந்திக்க ஏற்பாடு செய்வதாகக் கூறியுள்ளார். பாலியல் நோக்கத்துடன் குறித்த நபர் சிறுமியைச் சந்திக்கச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த இடத்திற்கு குறித்த நபர் வந்தபோது பொலிசார் சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபரினால் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் பொலிசாருக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles