11 வயது சிறுமியை படம் எடுத்ததாக குற்றச்சாட்டு! – சந்தேகநபரை தேடும் பொலிஸார்

Toronto-வின் Beaches பகுதியில் உள்ள Kew Gardens பூங்கா washroom ல் 11 வயது சிறுமியை அனுமதியின்றி புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படும் நபரை Toronto Police தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 4 மணியளவில், Queen Street East மற்றும் Lee Avenue அருகே அமைந்துள்ள Kew Gardens பூங்காவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

11 வயது சிறுமி washroom சென்றபோது, சந்தேகநபரும் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது.

சிறுமி washroom cubicle ஒன்றுக்குள் சென்ற பின்னர், அதன் இடைவெளிகள் வழியாக சந்தேகநபர் சிறுமியின் புகைப்படங்களை எடுத்ததாக பொலிஸார் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து சிறுமி உடனடியாக உதவி கோரியதாகவும், அதன் பின்னர் சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் Toronto Police தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் வைத்திருப்பவர்கள் Toronto Police-ஐ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles