10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலியல் வன்கொடுமை வழக்கில் 27 வயது நபர் கைது!

2015 ஆம் ஆண்டு ஹாமில்டனில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக 27 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஒருவரை காட்டுப் பகுதிக்கு இழுத்துச் செல்ல முயன்றதாக இந்த நபர் மீது பாலியல் வன்கொடுமை குறித்து குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் குறித்து பொலிசார் தொடர் விசாரணைகளை நடத்தி வந்தனர்.

சந்தேக நபரின் DNA தடயங்களை 2021ஆம் ஆண்டு பெற்ற பொலிசார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து, கடந்த மார்ச் மாதம் 2025ஆம் திகதி சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளனர்.

இதன்பின்னர் குறித்த நபர் கைதுசெய்யப்பட்ட நிலையில், நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குற்றம் நடந்த போது சந்தேக நபர் இளவயதானவர் என்பதால் அவரது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Related Articles

Latest Articles