கடந்த மாதம் ஸ்காபரோவில் (Scarborough) இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விட்பி (Whitby) நகரைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதுடைய பெண் ஒருவர், பேஸ்புக் (Facebook) டேட்டிங் தளம் ஊடாக ஜோன் ஹாய்லாக் (John Haylock) என்ற நபரை அறிமுகம் செய்துள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி லாரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் (Lawrence Avenue East) மற்றும் ஹோம்ஸ்டெட் ரோடு (Homestead Road) அருகே சந்தித்துள்ளனர்.
அந்தச் சந்திப்பின் போது ஜோன் ஹாய்லாக் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன் பின்னர் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஜோன் ஹாய்லாக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் இரண்டு குற்றவியல் துன்புறுத்தல் (Criminal Harassment) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த நபர் பேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் எக்ஸ் (X) போன்ற பல்வேறு சமூக ஊடகங்கள் ஊடாக பெண்களைத் தொடர்பு கொண்டுள்ளதால், இவரால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் இருக்கலாம் எனப் பொலிஸார் கருதுகின்றனர்.
இது தொடர்பான தகவல் அறிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
