வான்கூவர் கடலில் மிதக்கும் சொகுசு ஹோட்டல்: பொது விசாரணைக்குச் செல்லும் ‘சன் போர்ன்’ (Sunborn) திட்டம்!

வான்கூவர் (Vancouver) நகரின் கோல் ஹார்பர் (Coal Harbour) பகுதியில், பிரம்மாண்டமான படகு வடிவிலான ஆறு மாடி மிதக்கும் சொகுசு ஹோட்டலை அமைப்பதற்கான முன்மொழிவு, அடுத்த வாரம் சிட்டி கவுன்சிலின் பொது விசாரணைக்கு (Public hearing) வரவுள்ளது.

“சன் போர்ன் வான்கூவர்” (Sunborn Vancouver) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில், 250 அறைகள், உணவகம் மற்றும் 130 மீட்டர் நீளமுள்ள பொது நடைபாதை (Public pier) ஆகியவை இடம்பெறவுள்ளன.

கடல் மட்டத்திலான இந்த நடைபாதையில் பூங்காக்கள், சிற்றுண்டிச்சாலை மற்றும் ஸ்பா (Spa) வசதிகள் அமைக்கப்படவுள்ளன.

வான்கூவர் நகரின் சுற்றுலாத் தேவையைப் பூர்த்தி செய்ய 2050 ஆம் ஆண்டிற்குள் 10,000 புதிய ஹோட்டல் அறைகள் தேவைப்படுவதால், இத்தகைய திட்டங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் அவசியம் என நகர சபை உறுப்பினர் பீட்டர் மெய்ஸ்னர் (Peter Meiszner) தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த மிதக்கும் ஹோட்டல் திட்டம் தற்போதைய நகர அபிவிருத்தி விதிகளுக்கு (City development rules) அப்பாற்பட்டதாக இருப்பதால், இது குறித்து விரிவான பொது விவாதம் நடத்தப்படவுள்ளது.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles