யோர்க்வில் விபத்த – வாகனம் மோதியதில் 80 வயது மூதாட்டி படுகாயம்!

toronto.citynews.ca

றொரண்டோவில் இடம்பெற்ற விபத்தில் 80 வயதுடைய மூதாட்டி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

யோர்க்வில் (Yorkville) பகுதியில், பிரின்ஸ் ஆர்தர் அவென்யூ (Prince Arthur Avenue) மற்றும் அவென்யூ வீதி (Avenue Road) சந்திப்பிற்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7:30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி, சம்பவ இடத்திலேயே தங்கியிருந்து பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக றொரண்டோ பொலிஸார் (Toronto police) உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகனடாவின் புதிய சட்டத்தால் அகதிகள் தவிப்பு – மனிதாபிமான உதவி செய்தவர்களுக்கும் ஆபத்து!
Next articleஹார்ட் லேக் படகு விபத்து – நீரில் மூழ்கிய நபர் சடலமாக மீட்பு!