மேயர் தேர்தல் விவாதம்: பெண் ஆடை சர்ச்சை – மேடையை விட்டு வெளியேறிய வேட்பாளர்கள்!

கனடாவின் Ontario மாகாணத்திலுள்ள North Bay மேயர் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற விவாதத்தில், பார்வையாளர் ஒருவர் கூச்சலிட்டதால் இரு வேட்பாளர்கள் மேடையை விட்டு பாதியிலேயே வெளியேறினர்.

Nipissing University மாணவர் ஒன்றிய மையத்தில் நடைபெற்ற இவ்விவாதத்தில், வேட்பாளர் Dan Seguin தனது தொடக்க உரையின் போது, பெண்கள் வாக்குகளைக் கவருவதற்காகத் தான் “பாலினத்தை மாற்றப் போவதாகக் கூறி, தனது ஆடையில் இருந்து பெண்களுக்கான மார்பக்கச்சையை எடுத்துத் தோளில் வைத்தார்.

இதற்குப் பார்வையாளர் ஒருவர் எதிர்ப்புக் குரல் எழுப்பி கூச்சலிட்டதால், ஆத்திரமடைந்த Dan Seguin மற்றும் அவருடன் இருந்த மற்றொரு வேட்பாளரான Melanie Demers ஆகிய இருவரும் விவாதத்தைப் புறக்கணித்து மேடையை விட்டு வெளியேறினர்.

இதனைத் தொடர்ந்து, மேடையில் இருந்த மற்ற மூன்று வேட்பாளர்களான Jamie Lowery, Maggie Horsfield மற்றும் Connor Currie ஆகியோர் மாணவர் நலன், போக்குவரத்து வசதிகள், வீடற்றோர் பிரச்சினை மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்துத் தொடர்ந்து விவாதித்தனர்.

ஒக்டோபர் 26-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles