‘மேப்பிள் வாஷிங்’ மோசடி – கனடாவில் சிக்கிய முன்னணி பல்பொருள் அங்காடிகள்!

அமெரிக்காவின் இறக்குமதி வரி அச்சுறுத்தலை அடுத்து, கனடா நாட்டு மக்கள் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, வெளிநாட்டு தயாரிப்புகளை கனடா நாட்டு தயாரிப்புகள் போலக் காட்டி ஏமாற்றும் மேப்பிள் வாஷிங்‘ (Maple washing) என்ற புதிய மோசடி அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக 2024 நவம்பர் முதல் 2026 மே 11 வரை 403 புகார்கள் வந்துள்ளதாக கனடா உணவு ஆய்வு முகமை (CFIA) தெரிவித்துள்ளது.

இதில் 119 புகார்களில் விதிமுறை மீறல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாக முன்னணி பல்பொருள் அங்காடி நிறுவனமான Loblaw-க்கு சொந்தமான இரு கடைகளுக்கு தலா $10,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த மோசடியில் தொடர்புடையதாகக் கூறி Loblaw மற்றும் Sobeys ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் கூட்டுத் வழக்கு (Class action) ஒன்றும் தொடரப்பட்டுள்ளது.

இருப்பினும், ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு கைகளால் லேபிள்களை ஒட்டும்போது தவறுதலாக நடந்த சில தனிப்பட்ட சம்பவங்கள்‘ (Isolated incidents) இவை என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், இதில் எவ்வித திட்டமிட்ட உள்நோக்கமும் இல்லை என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன.

இந்த வழக்கின் முக்கிய விசாரணை வரும் இலையுதிர்காலத்தில் (Fall) நடைபெறவுள்ளது.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles