மேசடி ஒப்பந்தக்காரரால் கூரையை இழந்து தவிக்கும் Scarborough முதியவர்!

Scarborough பகுதியின் Guildwood Parkway இல் வசிக்கும் 76 வயதான Lawrence Huang என்ற முதியவர், போலி கூரை பழுதுபார்ப்பு நிறுவனத்தின் (Roofing company) மோசடியால் வீட்டின் கூரை பிரிக்கப்பட்டு, வீடு இடிபாடுகளான நிலையில் விடுதியில் (Motel) தங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Super Dry Roofing and Masonry என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், வீட்டின் கூரையில் எலிகள் இருப்பதாகக் கூறி, 50,000 டாலர் ஒப்பந்தத்தில் முன்பணமாக 25,000 டாலரைப் பெற்று கூரையை முழுவதும் பிரித்தெறிந்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.

அதேவேளை, “தவறான வேலைப்பாடுகளுக்கு” (Faulty workmanship) இழப்பீடு வழங்க முடியாது எனக் கூறி, அவரின் காப்புறுதி நிறுவனமான TD Insurance வீட்டை மீண்டும் கட்டுவதற்கான கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இந்த மோசடி குறித்து Toronto Police Service தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், வீடு தேடிவந்து சேவை வழங்கும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

Related Articles

Latest Articles