மீண்டும் அதிகாரிகளிடம் சிக்கிய லோப்லா நிறுவத்திற்கு $10,000 அபராதம்!

பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை, கனடியத் தயாரிப்புகள் எனத் தவறாக விளம்பரப்படுத்தியதற்காக லோப்லா (Loblaw) நிறுவனத்திற்குச் சொந்தமான கடைக்கு கனடிய உணவு ஆய்வு முகமை (CFIA) $10,000 அபராதம் விதித்துள்ளது.

டொராண்டோவில் உள்ள Fortinos கிளையில், பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட பாலாடைக்கட்டியை (Cheese) கனடியத் தயாரிப்பைக் குறிக்கும் மேப்பிள் இலைச் சின்னத்துடன் காட்சிப்படுத்தியதே இந்தத் தண்டனைக்குக் காரணமாகும்.

இதேபோன்ற விதிமீறலுக்காக கடந்த மாதம் மற்றுமொரு Superstore கிளைக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

“கனடியத் தயாரிப்புகளை வாங்குவோம்” (Buy Canadian) என்ற இயக்கம் வலுவடைந்து வரும் நிலையில், நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் இத்தகைய செயல்களைத் தடுக்க CFIA கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதேபோன்ற புகார்கள் தொடர்பாக தற்போது சோபிஸ் (Sobeys) நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

லோப்லா நிறுவனம் இத்தவறுகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ள போதிலும், பெரிய நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் இந்த $10,000 அபராதம் மிகவும் குறைவானது என முன்னாள் அதிகாரிகள் விமர்சித்துள்ளனர்.

Video thumbnail
எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைந்த அமெரிக்க நபர் தற்கொலை!
01:15
Video thumbnail
ஒன்ராறியோவில் உயர்கல்வி புரட்சி - 6.4 பில்லியன் டொலர் வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி ஒதுக்கீடு!
01:34
Video thumbnail
றொரண்டோ TTC பேருந்தில் தாக்குதல் - சந்தேக நபரைத் தேடும் பொலிஸார்!
00:38
Video thumbnail
றொரண்டோவின் புதிய EDGE ஊக்கத் திட்டம் - முதல் பயனாளியாக நோர்த் யோர்க் நிறுவனம் தெரிவு!
01:09
Video thumbnail
கனடாவில் சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஏ.ஐ (AI) தடை? லிபரல் கட்சி விவாதம்!
01:21
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10

Related Articles

Latest Articles