புதன்கிழமை (நவம்பர் 11) இரவு நடைபெற்ற LOTTO 6/49 Gold Ball குலுக்கலில், 38 மில்லியன் டொலர் பெறுமதியான பிரமாண்ட பரிசை வென்ற அதிர்ஷ்ட சீட்டு மிசிசாகாவில் (Mississauga) விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ லொட்டரி மற்றும் கேமிங் கூட்டுத்தாபனம் (OLG) அறிவித்துள்ளது.
இதனைத் தவிர, LOTTO 6/49 இரண்டாவது பரிசான 211,077.30 டொலர்களை வென்ற சீட்டு ரொறன்ரோவில் (Toronto) விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, ஒன்ராறியோவின் (Ontario) லீட்ஸ் மற்றும் கிரென்வில் (Leeds and Grenville) பிராந்தியத்தில் விற்பனை செய்யப்பட்ட சீட்டிற்கு 1 மில்லியன் டொலர் ENCORE பரிசு விழுந்துள்ளது.
இந்தப் பரிசுகளை வென்றவர்கள் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
எனவே, லொட்டரி சீட்டுக்களை வாங்கியவர்கள் தமது சீட்டுக்களை OLG செயலி மூலமாகவோ அல்லது விற்பனை நிலையங்களுக்குச் சென்றோ சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
