கனடாவின் பிரதமராக Mark Carney பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அவரது நிர்வாகம் முந்தைய Justin Trudeau அரசாங்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு பெரும் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் போன்ற பாணியில் நாட்டை வழிநடத்தும் அவர், சமூக நலத்திட்டங்களை விட பொருளாதார வளர்ச்சி, உட்கட்டமைப்பு மற்றும் இராணுவச் செலவினங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.
குறிப்பாக, சர்ச்சைக்குரிய கார்பன் வரி (Carbon Tax) மற்றும் டிஜிட்டல் சேவை வரியை அவர் நீக்கியுள்ளதுடன், இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் வர்த்தக உறவுகளைப் புதுப்பித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் Donald Trump உடனான உறவைச் சமநிலைப்படுத்துவதில் அவர் காட்டும் ஆர்வம் மக்களிடையே ஆதரவைப் பெற்றுள்ளது.
அண்மைய கருத்துக்கணிப்புகளின்படி, லிபரல் கட்சியின் செல்வாக்கு 40 சதவீதத்தைத் தாண்டி, பெரும்பான்மை ஆட்சி அமைக்கும் நிலையை எட்டியுள்ளது.
இருப்பினும், நாடாளுமன்றக் கூட்டங்களைத் தவிர்ப்பது மற்றும் ஊடகங்களுடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டது போன்ற விடயங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.
எதிர்கட்சித் தலைவர் Pierre Poilievre, பிரதமரின் பொருளாதாரத் திட்டங்கள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை எனச் சாடியுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்கள் Mark Carneyயின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது










