கார் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய கும்பலொன்றை டர்ஹாம் பொலிசார் அண்மையில் கைதுசெய்திருந்தனர்.
இவர்களில் ஒருவருக்கு நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
எனினும், நான்கு நாட்களின் பின்னர் பொலிசார் கண்காணிப்பிற்கு சென்ற போது குறித்த நபர் குறித்த இடத்தில் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட பின்னர் குறித்த பெண் உண்மையான பெயரை மறைத்து பொலிசாருக்கு பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதுடன் நீதிமன்றத்தையும் பிழையாக வழிநடத்தியுள்ளார்.
எனினும் இந்தப் பெண் 24 வயதுடன் அச்மா ஒட்ரியா (Asmaa Ouadria) என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த பெண் குறித்த தகவல்கள் அறிந்தவர்கள் பொலிசாருக்கு அறியத்தருமாறு கோரியுள்ளனர்.
38 வாகனங்கள் திருடப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய குழுவைக் கைதுசெய்த போது குறித்த பெண்ணும் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.