டொரண்டோவில் ஶ்ரீ, தான் 15 வயது சிறுவன் எனக் கூறி சமூக வலைத்தளத்தில் 13 வயது சிறுமியை ஏமாற்றிய 29 வயது நபரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
Snapchat வாயிலாக அந்த நபர் சிறுமி தொடர்புகொண்டு குறித்த நபர் நட்பாக பழகியுள்ளார். பின்னர் இருவரும் நேரில் சந்தித்துள்ளதுடன் பாலியல் உறவும் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
சந்தேகநபரின் உண்மையான வயது தெரிய வந்ததும், சிறுமி பொலிசாரை தொடர்புகொண்டுள்ளார்.
குறித்த நபருக்கு எதிராக பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ள போதிலும் எந்தவொரு குற்றச்சாட்டும் இதுவரை நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.
இது தொடர்பாக மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அறியத்தருமாறு பொலிசார் கோரியுள்ளனர்.