பொது நிகழ்வுகளுக்கு சொந்தமாக மதுபானம் கொண்டு வர அனுமதி – ஒன்ராறியோ அதிரடி தீர்மானம்!

ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் திறந்தவெளி பொது நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த மதுபானங்களைக் கொண்டு வர அனுமதிக்கும் புதிய திட்டத்தை முதல்வர் டக் போர்ட் (Doug Ford) அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 30-ஆம் திகதி முதல் இந்த தீர்மானம் நடைமுறைக்கு வரவுள்ளது.

அதன்படி, நகராட்சிகளால் அங்கீகரிக்கப்பட்ட கலாச்சார நிகழ்வுகள், விவசாயிகள் சந்தை (Farmers’ markets), திரைப்படத் திரையிடல்கள் மற்றும் உள்ளூர் திருவிழாக்களுக்கு பொதுமக்கள் மதுபானங்களை எடுத்துச் செல்லலாம்.

தற்போது விளையாட்டு நிகழ்வுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் இந்த டெயில்கேட்‘ (Tailgate) அனுமதி, இனி சமூக நிகழ்வுகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

உள்ளக சுற்றுலாவை மேம்படுத்தவும், நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் செலவுகளைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் Doug Downey தெரிவித்துள்ளார்.

இதற்காக நகராட்சிகள் பொது இடங்களில் மது அருந்துவதை அனுமதிக்கும் துணைச் சட்டங்கள்  (Bylaws) இயற்றப்பட வேண்டியது அவசியமாகும்.

அதேபோல், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதற்கான சிறப்பு அனுமதியை AGCO (Alcohol and Gaming Commission of Ontario) மூலம் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles