பிராம்ப்டனில் உள்ள கென்னடி வீதி வடக்கு மற்றும் வில்லியம்ஸ் பார்க்வே (Kennedy Road North and Williams Parkway) சந்திப்பு பகுதியில் உள்ள வீடொன்றில், ஞாயிற்றுக்கிழமை இரவு 8:23 மணியளவில் பிறந்த குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் பீல் பிராந்திய பொலிஸ் (Peel Regional Police – PRP) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தை பிறந்த பின்னர் அதன் உடலை மறைக்க முயன்றதாக (Concealing the body of a child after birth) அந்தப் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தைக்கும், கைது செய்யப்பட்டுள்ள பெண்ணுக்கும் இடையிலான உறவுமுறை குறித்து காவல்துறையினர் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இச்சம்பவம் குறித்த ஆரம்பகட்ட விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
