கனடாவில் 80,000 இற்கும் மேற்பட்ட ஹூண்டாய் (Hyundai) ரக வாகனங்கள் மீளழைப்பு – விபத்து அபாயம் என எச்சரிக்கை!

கனடாவில் விபத்து ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் “பாதுகாப்பு குறைபாடு” காரணமாக, 80,000 இற்கும் மேற்பட்ட வாகனங்களை ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அவசரமாக மீளழைத்துள்ளது (Recall).

டிரான்ஸ்போர்ட் கனடா (Transport Canada) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குறிப்பிட்ட சில வாகனங்களின் முன் பக்க கேமராவில் (Front camera) ஏற்பட்டுள்ள மென்பொருள் கோளாறு (Software problem) காரணமாக, மோதல் தவிர்ப்பு அமைப்பு (Forward Collision Avoidance System) திடீரென பிரேக் போடக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு ஆபத்தும் இல்லாத வேளையில் வாகனம் இவ்வாறு திடீரென நிறுத்தப்படுவதால், பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

2025 இல் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் சாண்டா குரூஸ் (Hyundai Santa Cruz) மாதிரி வாகனங்களே இவ்வாறு மீளழைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், ​2025 மற்றும் 2026 இல் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் டக்சன் (Hyundai Tucson) எரிவாயு, ஹைப்ரிட் (HEV) மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV) மாதிரிகளும் மீளழைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும், அவர்கள் தங்கள் வாகனங்களை டீலர்ஷிப்பிற்கு எடுத்துச் சென்று மென்பொருளைப் புதுப்பித்துக் கொள்ளுமாறும் ஹூண்டாய் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles