பிராம்டனில் உள்ள 69 வயதான அசோக் குமார் என்ற குருக்கள், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிசார் தெரிவித்தனர்.
வீடொன்றில் மதச் சடங்கு நடத்தச் சென்று, அங்கிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குறித்த மதத் தலைவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த நபர் பல ஆண்டுகளாக குருக்களாக பணியாற்றி வந்துள்ளதாகவும் இந்த நபரினால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என்றும் அவ்வாறு இருந்தால் தகவல் தருமாறும் பொலிசார், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.