பாலியல் வன்கொடுமை வழக்கில் ‘Sexsomnia’ வாதம் நிராகரிப்பு – பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு $200K இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

கனடாவில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க, தான் தூக்கத்தில் பாலியல் ரீதியாகச் செயல்படும் ‘Sexsomnia’ என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டதாகக் கூறி வாதாடிய நபரின் வாதம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 200,000 டொலருக்கும் அதிகத் தொகை இழப்பீடாக வழங்கவும் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) சிவில் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் சுரங்கத்துறை நிர்வாகியான கார்ல் ரிச்சர்ட் அன்டோனியஸ் (Karl Richard Antonius) என்பவர், கடந்த 2015ஆம் ஆண்டில் பேர்மாண்ட் பசிபிக் ரிம் (Fairmont Pacific Rim) விடுதியில் வைத்து பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த வழக்கில் அவரது வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், கடந்த 2020ஆம் ஆண்டில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் தொடுத்த சிவில் வழக்கில் நீதிபதி வாரன் பி. மில்மேன் (Justice Warren B. Milman) இந்த இழப்பீட்டுத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இச்சம்பவத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, உறவினர்கள் மற்றும் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு வாழ்ந்து வரும் அப்பெண்ணின் துயரத்தைக் கருத்திற்கொண்டு, வேதனை மற்றும் பாதிப்புகளுக்கான இழப்பீடாக $200,000 நிதியும், ஆலோசனைச் செலவுகளுக்காக (Counselling expenses) சுமார் $10,000 நிதியும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles