கனடா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் வகையில், நிதித்துறை ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய ஒப்பந்தம் ஒன்றில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
வான்கூவர் (Vancouver) நகரில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் முடிவில், கனடிய நிதி அமைச்சர் ஃபிரான்சுவா-பிலிப் சாம்பேன் (François-Philippe Champagne), சர்வதேச வர்த்தக அமைச்சர் மணீந்தர் சித்து (Maninder Sidhu) மற்றும் சீன துணைப் பிரதமர் ஹே லிஃபெங் (He Lifeng) ஆகியோர் இந்த கூட்டு ஒப்பந்தத்தை அறிவித்தனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் நிதிச் சேவை சந்தைகளுக்கான அணுகல் விரிவுபடுத்தப்படுவதுடன், இரு நாடுகளின் நிதி ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பும் மேம்படுத்தப்படவுள்ளது.
மேலும், வெளிப்படையான மற்றும் கணிப்பிடக்கூடிய வர்த்தக மற்றும் முதலீட்டு சூழலை உருவாக்க இரு நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
அடுத்த வாரம் ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவு (APEC) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்த முக்கிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
