Air Canada நிறுவனம் தொலைபேசி அழைப்பு மையம் (Call Centre) வாயிலாக புதிய விமான பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, ஒரு நபருக்கு 30 டொலர் வீதம் திரும்பப்பெற முடியாத (non-refundable) புதிய சேவைக் கட்டணத்தை அமல்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் இணையதளம் அல்லது செயலி (App) போன்ற டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், தொலைபேசி காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் ஒக்டோபர் 15 முதல் இந்தக் கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இருப்பினும், இணையதளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்வோருக்கும், மாற்றுத்திறனாளிகள் போன்ற சிறப்பு உதவி தேவைப்படுவோருக்கும், பயணத் தாமதம் அல்லது இரத்து தொடர்பான சேவைகளுக்கும் இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
