டொரண்டோ நகரில் புதிய கண்காணிப்புக் கெமராக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநகர மேயர் ஒலிவியா செள (Olivia Chow) தெரிவித்துள்ளார்.
டொரண்டோவில் வேகக் கட்டுப்பாடு பெரும் சிக்கல் என்றும் இதனைக் கண்காணிக்க கெமராக்கள் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர மேயர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய டொரண்டோவில் 75 புதிய வேகக் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு தானியங்கி கெமராக்கள் மூலம் 40 மில்லியன் டொலர் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டதாக டொரண்டோ நகர அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும், இது அபாரத் வசூலிக்கும் நோக்கம் அல்ல என்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாநகர மேயர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள ‘Community Safety Zone’ பிரதேசங்களில் இந்த புதிய கேமராக்கள் அதிகமாக நிறுவப்படுகின்றன. இது பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுநர்களை பாதுகாக்கும் முக்கிய முயற்சி என்றும் மாநகர மேயர் தெரிவித்துள்ளார்.
வேககக் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களின் வேகம் 60 வீதத்தில் இருந்து 43% வரை குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.