டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை பொலிஸ் அதிகாரியொருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார் என பீல் பிராந்திய பொலிசார் தெரிவித்தனர். அவரின் நிலை குறித்தும் விபரங்கள் குறித்தும் உடனடியாக எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை.
இது தொடர்பாக ஒண்டாரியோ மாகாண சிறப்பு விசாரணை பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்னர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரிக்கு எந்தவிதமான காயமும் இல்லையென உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சமும் இல்லை என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னர் பியர்சன் விமான நிலையத்தின் டெர்மினல் வன் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் பயணிகள், வரவேற்பு பகுதியாக வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
டெர்மினல் 1 பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்டதாக விமான நிலையத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். 8 முதல் 10 துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெர்மினல் வன் வழியாக வாகனங்கள் வெளிச் செல்லும் பாதையும் மூடப்பட்டுள்ளது. நெரிசலில் சிக்கிய பயணிகள் departure வழியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து பொலிசார் உடனடியாக எவ்விதத் தகவல்களையும் வெளியிடவில்லை. எனினும், விசேட விசாரணைப் பிரிவினர் விசாரணைகளைத் தொடர்கின்றனர்.