டொராண்டோவை புரட்டிப்போட்ட கடும் புயல் – தற்போது நிலை என்ன?

டொராண்டோ மற்றும் GTA பகுதிகளை புதன்கிழமை மாலை தாக்கிய மிகக் கடுமையான இடியுடன் கூடிய புயலின் பாதிப்புகளில் இருந்து நகரம் தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது.

கனமழை, golf ball அளவிலான ஆலங்கட்டி மற்றும் மிகப் பலத்த காற்றுடன் தாக்கிய புயல் காரணமாக பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Don Valley Parkway உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வெள்ளநீர் தேங்கியதால் பல வாகனங்கள் சிக்கிக்கொண்டன. 

DVP, Yonge Street உள்ளிட்ட பல முக்கிய வீதிகளின் சில பகுதிகள் வெள்ளம் காரணமாக மூடப்பட்டதுடன், TTC சேவைகளும் பாதிக்கப்பட்டன.

சுமார் 65,000 Toronto Hydro வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் தடைப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை பெருமளவில் மேம்பட்டுள்ளது.

அதேநேரம் Ontario-வின் ஏனைய பகுதிகளில் Hydro One சேவையின் கீழ் 58,000-க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இன்னும் மின்சாரம் இன்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Toronto-விலுள்ள Rogers Stadium-க்கும் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது. Toronto Pearson Airport-ல் பல விமான சேவைகள் தாமதமடைந்ததுடன், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

Toronto-வுக்கான கடுமையான thunderstorm எச்சரிக்கைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.

எனினும், கீழே விழுந்துள்ள மின்கம்பிகள், மரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீர் தொடர்பில் பொதுமக்கள் தொடர்ந்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles