டொராண்டோவில் வசந்தகால ஒவ்வாமை குறித்து எச்சரிக்கை!

கனடாவில் வசந்தகாலத்தில் தூசிகளினால் ஏற்படும் ஒவ்வாமையினால் பாதிக்கப்படுவோர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வசந்தகாலத்தில் காற்றில் பரவும் தூசிகளினால் ஏற்படும் ஒவ்வாமையினால் பாதிகப்படுவோர் மே மாதத்தில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று ஒட்டாவாவில் உள்ள Aerobiology Research Laboratories (ARL) எச்சரிக்கிறது.

காலநிலை மாற்றத்தினால் தூசிகள் காற்றில் பரவுவது அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1990களில் காற்றில் பரவும் தூசி துகள்கள் தற்போது இரட்டிப்பாக அதிகரித்துள்ளமை கவலைக்குரியது என்றும் ARL நிறுவனம் தெரிவித்துள்ளது.

காற்றுத் தூசிகளினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க தேவை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், அதிக சிரமங்கள் ஏற்பட்டால் மருத்துவரை அணுக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles