டொராண்டோ (Toronto) மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் (GTA) இன்று சனிக்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும் என சுற்றுச்சூழல் கனடா (Environment Canada) விசேட வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கொலராடோ (Colorado) பகுதியிலிருந்து நகரும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக சுமார் 25 முதல் 50 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இன்று மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புனித வெள்ளியான (Good Friday) இன்று டொராண்டோவில் 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் மழை பெய்யும். எனினும், ஞாயிற்றுக்கிழமை முதல் வெப்பநிலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டு, அதிகபட்சமாக 6 டிகிரி செல்சியஸ் மட்டுமே பதிவாகும் என வானிலை நிபுணர் பில் கூல்டர் (Bill Coulter) எச்சரித்துள்ளார்.
திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வானம் தெளிவாகக் காணப்பட்டாலும், வெப்பநிலை மேலும் குறைந்து 3 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலேயே இருக்கும்.
எதிர்வரும் புதன்கிழமை முதலே வழமையான வசந்த கால வெப்பநிலை (8 டிகிரி செல்சியஸ்) மீண்டும் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈஸ்டர் விடுமுறைக்காகப் பயணங்களை மேற்கொள்பவர்கள் மழையுடனான வானிலை குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
