டொரன்டோ பெரு நகர் பகுதிக்கு ஆலங்கட்டி மழை எச்சரிக்கை!

டொரொண்டோ மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் இன்று இரவு முதல் ஞாயிறு காலை வரை கடும் ஆலங்கட்டி மழை பெய்யலாம் என்று சுற்றுச்சூழல் கனடா (Environment Canada) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் வெப்பநிலை குறைந்து வீதிகளில் பனி படிந்து பயணத்திற்கு பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உள் வீதிகளில் பனி படிவதுடன் மரங்கள் முறிந்து வீழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஒன்டாரியோ மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வெப்பநிலை வெகுவாக குறையும் என்பதால் டொரொண்டோ நகரில் உள்ள warming centres இன்று மாலை 5 மணி முதல் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் வெப்ப நிலை குறையும் என்றாலும் திங்கட்கிழமை வெப்பநிலை அதிகரித்து 12°C ஆக உயர வாய்ப்பு உள்ளது என்று சுற்றச்சூழல் கனடா அறிவித்துள்ளது.

அத்துடன், அடுத்த வார இறுதியில் வெப்பநிலை மேலும் அதிகரித்து 14°C வரை செல்லும் என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles