டொரண்டோவில் நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை குறைகிறது!

டொரண்டோ பெரு நகர் பிரதேசத்தில் பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் 20 சதம் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் நுகர்வோர் கார்பன் வரி ஏப்ரல் முதலாம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுவதால் இந்த விலை குறைப்பு ஏற்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கார்பன் வரி இரத்துச் செய்யப்படுவதால் பெட்ரோல் மட்டுமன்றி டீசல், விமான எரிபொருள், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகளும் குறையும் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles