டொரண்டோ நகரத்தில் நேற்று பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியது. சுமார் 60 மில்லிமீட்டர் மழை வரை பதிவாகும் என்று ஏற்கனவே சுற்றுச்சூழல் கனடா வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு முதல் மழை குறைய ஆரம்பித்துள்ள போதிலும் லேசான மழை வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை 10 முதல் 15 மில்லிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சனிக்கிழமை வெப்பநிலை 15°C ஆக அதிகரிக்கக் கூடும் என்றும் ஆனால் ஞாயிறு மற்றும் திங்கள் நாட்களில் சூரியன் மறுபடியும் ஒளிக்க ஆரம்பித்து, வெப்பநிலை 18°C வரை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மே மாதத்தில் எதிர்பாராத குறைந்த வெப்பநிலை டொரண்டோவை வாட்டும் நிலையில் இது கடந்த 20 வருடங்களில் மே மாதத்தில் இருந்த குளிர்ந்த வெப்ப நிலை என்று வானிலை ஆய்வாளர் டேவிட் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.