Caledon பகுதியில் குழந்தைகளை தனது காருக்குள் ஏறுமாறு அழைக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், Torontoவைச் சேர்ந்த 74 வயது நபர் ஒருவரை Ontario Provincial Police கைது செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மாலை சுமார் 7:20 மணியளவில், Dotchson Avenue மற்றும் Sparrowbrook Street பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாகனம் ஒன்றில் வந்த நபர், அங்கு இருந்த குழந்தைகளை அணுகி, தனது காருக்குள் ஏறுமாறு அவர்களை சம்மதிக்க வைக்க முயன்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆனால் குழந்தைகள் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து காரில் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட Caledon OPP, புதன்கிழமை Torontoவைச் சேர்ந்த 74 வயது நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
அவர் மீது 14 வயதுக்குட்பட்ட ஒருவரை கடத்தியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரின் பெயரை பொலிஸார் வெளியிடவில்லை.
இந்த விவகாரத்தில் மேலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
எனவே பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள், தங்கள் குழந்தைகளுடன் பேசுமாறும், இதேபோன்ற சம்பவம் ஏதேனும் இடம்பெற்றிருக்கிறதா என்பதை கேட்டறியுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.










