வசந்தகாலத்தில் டொரண்டோவில் நடக்கும் மரதன் ஓட்டம் இம்முறை வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
இதில் 50இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
48ஆவது வருடத்தில் நடத்தப்படும் இந்த மரதன் ஓட்டத்தில், மரதன், கால்பந்து, பேஸ்போல், Hockey, தடகள வீரர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த மரதன் 10 மற்றும் 5 கிலோமீற்றர்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் ஓட்டமும், நடையுமாகவும் இந்த நிகழ்வில் பலரும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்வின் மூலம் Princess Margaret Cancer Foundation மற்றும் அதனுடன் தொடர்புடைய பல நலன்புரி அமைப்புக்கள் நிதி சேகரிப்பதற்காக இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.
யோங் மற்றும் ஷெப்பர்ட் அவென்யூவில் காலை 7.30இற்கு மரதன் ஓட்டம் ஆரம்பமாகும் அதேவேளை, 10 மற்றும் 5 கிலோமீற்றர் ஓட்டம் குயின் எலிசபெத் கட்டிடத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்கவும் பார்யிடவும் 50 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் டொரண்டோவில் ஒன்று கூடுகின்றனர்.
இதனால் ஞாயிற்றுக்கிழமை டொரண்டோ டவுன் டவுனில் பல வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன், மூடப்பட்டுள்ள வீதிகளை கவனத்தில் கொண்டு மாற்றுவழிகளைப் பயன்படுத்துமாறு பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.