கனடா வரிகள்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்க உணவு இறக்குமதியாளர் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கனடா நாட்டின் பொருட்கள் மீது விதித்துள்ள புதிய வரிகளுக்கு எதிராக, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல உணவு இறக்குமதி நிறுவனமான ‘கெல்லர்ட் குளோபல் குரூப்’ (Gellert Global Group) வழக்குத் தொடர்ந்துள்ளது.

நியூ ஜெர்சியை (New Jersey) தளமாகக் கொண்0டு இயங்கும் இந்த நிறுவனம், கடந்த 100 ஆண்டுகளாக கனடாவிலிருந்து பாலாடைக்கட்டிகளை (Cheese) இறக்குமதி செய்து வருகிறது.

அதிபர் டிரம்ப் 1930-ஆம் ஆண்டின் பழைய வர்த்தகச் சட்டத்தைப் (Tariff Act of 1930) பயன்படுத்தி கனடா பால் பொருட்கள் மீது விதித்துள்ள இந்த வரிகளால், தங்களுக்கு ஆண்டுக்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளது.

அதிபர் டிரம்ப் தமக்குள்ள அதிகார வரம்பைத் தாண்டி, நாடாளுமன்றத்தின் (Congress) அனுமதியின்றி இத்தகைய வரிகளை விதித்துள்ளதாகக் கூறி, ‘லிபர்ட்டி ஜஸ்டிஸ் சென்டர்’ (Liberty Justice Center) என்ற அமைப்புடன் இணைந்து நியூயார்க் (New York) நீதிமன்றத்தில் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து, பால் பொருட்கள், மதுபானங்கள், மரச்சாமான்கள் மற்றும் ஹாக்கி மட்டைகள் உள்ளிட்ட பல கனடியப் பொருட்கள் மீது இந்த வரிகள் விதிக்கப்பட்டன.

இந்த வரிகள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட வேண்டும் என்றும், செலுத்தப்பட்ட வரிப் பணத்தை வட்டியுடன் திரும்பப் பெற வேண்டும் என்றும் வழக்கில் கோரப்பட்டுள்ளது. எனினும், அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கை நீதிமன்றத்தில் உறுதியாக நியாயப்படுத்தப்படும் என அமெரிக்க நிர்வாகத் தரப்பு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles