கனடாவில் தீவிரமாக தேடப்பட்டு வந்த குற்றவாளி இத்தாலியில் கைது!

கனடாவில் தீவிரமாக தேடப்பட்டு வந்த நபர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘Blood Family Mafia’ என்ற மோசடிக் குழுவின் தலைவராக செயல்பட்டு வந்த இந்த நபர் தலைமறைவாகவிருந்து தனது குழுவை இயக்கி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் இவர் பற்றிய தகவல் தருவோருக்கு 250,000 டொலர் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நபர் மீது போதைப்பொருள் கடத்தல், சதி, ஆயுதத்துடன் தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles