கனடாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான டொயோட்டா (Toyota) வாகனங்கள் மீளழைப்பு!

கனடாவில் இயங்கும் டொயோட்டா (Toyota) நிறுவனம், வாகனக் கட்டுப்பாட்டை இழக்கச் செய்யக்கூடிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்களைத் திரும்ப அழைப்பதாக (Recall) அறிவித்துள்ளது.

வாகனத்தின் பின்புற சஸ்பென்ஷன் ஆர்ம் (Suspension arm) பகுதியில் துருப்பிடித்தல் அல்லது தேய்மானம் காரணமாக அந்தப் பாகம் தனியாகப் பிரியும் அபாயம் உள்ளது.

இதனால் வாகனம் ஓடும்போது சாரதி அதன் கட்டுப்பாட்டை இழக்க நேரிடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட டொயோட்டா ராவ் 4 (Toyota RAV4) மாடல்கள் மற்றும் 2010 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட லெக்ஸஸ் எச்.எஸ் 250எச் (Lexus HS 250h) ஆகிய வாகனங்கள் இதில் உள்ளடங்கும்.

வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களுக்கு (Dealers) கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அங்கு குறித்த பாகங்கள் இலவசமாகப் பரிசோதிக்கப்பட்டு, தேவைப்படின் மாற்றியமைக்கப்படும்.

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து டொயோட்டா நிறுவனம் பல்வேறு காரணங்களுக்காகத் தனது வாகனங்களைத் திரும்ப அழைத்து வருகின்றது.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் ஹைலான்டர் (Highlander), பிரியஸ் (Prius) மற்றும் டன்ட்ரா (Tundra) ஆகிய மாடல்களில் இருக்கை, கதவு மற்றும் கேமரா தொடர்பான கோளாறுகள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலதிக விபரங்களை வாகன உரிமையாளர்கள் டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ள முடியும்.

Related Articles

Latest Articles