கார்பன் வரி ரத்து செய்யப்பட்டதன் நன்மைகள் விரைவில் கிடைக்கும்! பொருட்களின் விலைகள் குறையும் சாத்தியம்!
கனடாவில் நுகர்வோருக்கான கார்பன் வரி (Consumer Carbon Price) ரத்து செய்யப்படுவதால், பெற்றோல் உள்ளிட்ட சில பொருட்களின் விலை உடனடியாக குறைய வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டெஜார்டின்ஸ் (Desjardins) நிறுவனத்தின் பொருளாதார ஆய்வு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான புதிய லிபரல் அரசு, எதிர்வரும் ஏப்ரல் 1 முதல் நுகர்வோருக்கான கார்பன் வரியை புஜ்ஜியமாக (Zero) மாற்ற முடிவு செய்தது.
இதன்பின்னர் பெட்ரோல் விலை உடனடி குறையும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் மத்திய அரசு கார்பன் வரி விதிக்கும் மாகாணங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 18 சென்ட் குறையும் என்றும் 50 லிட்டர் நிரப்பும் போது 9 டொலர்கள் வரை குறைவாக செலவாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கார்பன் வரி ரத்து செய்யப்பட்டு, போக்குவரத்து செலவு குறையும் போது உணவுப் பொருட்களின் விலையும் படிப்படியாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.