கனடாவின் மிகச்சிறந்த 50 மதுபான விடுதிகள் – முதலிடத்தைப் பிடித்த றொரண்டோ!

கனடாவின் மிகச்சிறந்த 50 மதுபான விடுதிகளின் (Canada’s 50 Best Bars) வருடாந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் றொரண்டோ (Toronto) நகரிலிருந்து மட்டும் மொத்தம் 21 மதுபான விடுதிகள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளன.​

அமைதியான சூழலில் காக்டெய்ல் (Cocktail) அருந்தும் இடங்கள் முதல், நண்பர்களுடன் பொழுதைக் கழிக்கக்கூடிய உள்ளூர் பப்கள் (Local Pubs) வரை பல்வேறு வகையான இடங்கள் இந்தத் தரவரிசையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

விடுதிகளின் தரம், அங்கு வழங்கப்படும் பானங்களின் சுவை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் தனித்துவமான அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் கனடாவின் சிறந்த (Canada’s Best) அமைப்பினால் இந்தத் தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலைப்பளுவுக்குப் பின் நண்பர்களுடன் ஒயின் (Wine) அருந்தவோ அல்லது மாறுபட்ட சுவையுடைய பானங்களை ரசிக்கவோ விரும்புவோருக்கு இந்தப் பட்டியல் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா முழுவதிலும் உள்ள மதுபான விடுதிகளில் சிறந்த சேவையை வழங்கும் இடங்களைக் கௌரவிக்கும் வகையில் இந்தத் தரவரிசை ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

Related Articles

Latest Articles