கனடாவின் உயரிய விருது பறிப்பு – குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இருவரின் கௌரவத்தை நீக்கினார் கவர்னர் ஜெனரல்!

பல்வேறு குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் அறியப்பட்ட இருவரின் உயரிய ‘ஆர்டர் ஆப் கனடா’ (Order of Canada) கௌரவப் பட்டங்களை நீக்குவதற்கு கனடாவின் கவர்னர் ஜெனரல் மேரி சைமன் (Mary Simon) ஒப்புதல் அளித்துள்ளார்.

‘ஸ்ட்ரீட் கிட்ஸ் இன்டர்நேஷனல்’ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பீட்டர் டல்க்ளிஷ் (Peter Dalglish) மற்றும் ‘SNC-Lavalin’ நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் லெமாரே (Jacques Lamarre) ஆகிய இருவரின் கௌரவங்களே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன.

2016 இல் இந்த விருது வழங்கப்பட்ட பீட்டர், நேபாளத்தில் 11 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலுள்ளார்.

2005 இல் விருது பெற்ற ஜாக் லெமாரே ஒரு பொறியியலாளர் ஆவார்.

இவர், லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் குடும்பத்தினருக்கு $2 மில்லியன் இலஞ்சம் கொடுத்து ஊழல் மற்றும் சதியில் ஈடுபட்ட குற்றத்திற்காகக் கடந்த ஜனவரியில் அவரது உரிமம் ரத்து செய்யப்பட்டு, $75,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் கான்ராட் பிளாக் (Conrad Black), பஃபி செயின்ட்-மேரி (Buffy Sainte-Marie) மற்றும் கார்த் டிராபின்ஸ்கி (Garth Drabinsky) ஆகியோரின் ‘ஆர்டர் ஆப் கனடா’ விருதுகளும் இதேபோன்று பல்வேறு மோசடி மற்றும் முறைகேடு காரணங்களால் பறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தவறிழைப்பவர்கள் எவ்வளவு உயரிய பதவியில் அல்லது கௌரவத்தில் இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதை இந்த நடவடிக்கை உணர்த்தியுள்ளது.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles