கடுமையான நெருக்கடியில் இருக்கும் கனடாவின் வீட்டுச் சந்தை!

கனடாவின் மத்திய வங்கியான Bank of Canada விரைவில் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால், ஏற்கனவே பலவீனமடைந்துள்ள நாட்டின் வீட்டுச் சந்தை (Housing Market) மேலும் கடுமையான நெருக்கடியைச் சந்திக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மத்திய வங்கி ஆளுநர் Tiff Macklem, மத்திய கிழக்கு மோதல்களால் உயர்ந்துவரும் எரிபொருள் விலை மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.

இதன் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் 28-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த வட்டி உயர்வு நடைமுறைக்கு வந்தால், மாறுபட்ட வட்டி விகிதக் கடன்களுக்கான தவணைத் தொகைகள் உடனடியாக உயரும் என்றும், இதனால் வீடு வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்து வீட்டு விலைகள் மேலும் சரிய வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீடுகளின் விற்பனை சரிவைக் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles