மிசிசாகா நகரில் தங்களில் வீட்டில் basement நிர்மாணிப்பதற்கு 85 ஆயிரம் டொலர்களை செலவிட்ட போதும் அந்தப் பணிகளை குறித்த நிறுவனம் முடிக்காமல், நிறுவனத்தை மூடிவிட்டதாக முறையிட்டுள்ளனர்.
குறித்த தம்பதியினர் ஓய்வுபெற்ற பின்னர் கூடுதல் வருமானம் பெறுவதற்காக basement அமைத்து அதனை வாடகைக்கு விட்டு மேலதிக வருமானத்தைப் பெறத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான நிர்மாணப் பணிகளை ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்து, இரண்டு மாதங்களில் வேலை முடிக்கப்பட வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனினும், ஒரு வருடமாக வேலை நிறைவு செய்யப்படவில்லை என குறித்த தம்பதியினர் முறையிட்டுள்ளனர்.
முற்பணமாக $35,000 வழங்கிய தம்பதிகள், பின் மேம்படுத்தும் பணிக்காக மேலும் $50,000 கொடுத்துள்ளனர். ஆனால், பணம் செலுத்தியதும் வேலை முற்றிலும் குறித்த நிறுவனம் கைவிட்டுள்ளது.
Instagram சமூக வலைத்தள விளம்பரத்தைப் பார்த்து குறித்த நிறுவனத்தை தெரிவு செய்துள்ளனர்.
தற்போது இந்த நிறுவனம் “permanently closed” என Google-ல் Update செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திடம் வேலை ஒப்படைத்த பிறகு முடிக்காமல் விட்டதாக சமூக வலைதளங்களில் முறையிடப்பட்டுள்ளது.